யாழில் போதைபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஆறு கோடி 40 இலட்சம் பெறுமதியான 182 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
புலனாய்வு சேவை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, புலோலி பகுதியில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 6.4 கோடி
ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பருத்தித்துறை காவல் பிரிவுக்குட்பட்ட
பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலதிக
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்களை
கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொதுமக்களின்
ஒத்துழைப்புடன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என
நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

