முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துணுக்காயில் நான்கு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நான்கு விளையாட்டுக் கழகங்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச செயலகத்தில் நேற்று மற்றும் முன்தினம் நடைபெற்ற நிகழ்வுகளில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விளையாட்டுக் கழகங்களின் கோரிக்கைக்கு அமைவாக, ரவிகரன் எம்.பி. தனது 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, கோட்டைகட்டியகுளம் தோழர்கள் விளையாட்டுக் கழகம், ஐயன்கன்குளம் தமிழ்த்தென்றல் விளையாட்டுக் கழகம், அனிஞ்சியன்குளம் நியூஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் தேறாங்கண்டல் இளந்தளிர் விளையாட்டுக் கழகம் ஆகிய நான்கு கழகங்களுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், துணுக்காய் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: https://samugammedia.com/sports-equipment-for-four-sports-clubs-in-thunukkai-1789712653

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்