முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடு முழுவதும் அதிரடி சோதனை: பொலித்தீன் பைகள் தொடர்பில் 104 விதிமீறல்கள் கண்டுப்பிடிப்பு!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின்போது, லஞ்ச் சீட் (Lunch Sheets) மற்றும் ‘சிலி-சிலி’ (Sili-Sili) பொலித்தீன் பைகள் தொடர்பில் 104 விதிமீறல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டறிந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி 22 மாவட்டங்களை மையப்படுத்தி இந்தச் சிறப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, லஞ்ச் சீட்கள் தொடர்பில் 43 விதிமீறல்களும், ‘சிலி-சிலி’ பொலித்தீன் பைகள் தொடர்பில் 58 விதிமீறல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2019 நவம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட 70ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு அமைவாகவே லஞ்ச் சீட்கள் மற்றும் உணவைச் சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் (Food Wrappers) விற்பனை செய்யப்பட வேண்டும் என உத்தரவு நடைமுறையில் உள்ளது.

அதேவேளை, 2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் கீழ், ‘சிலி-சிலி’ பொலித்தீன் பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றை விற்பனை செய்யும் பட்சத்தில், அவற்றின் விலையை நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

Source: https://samugammedia.com/nationwide-crackdown-104-violations-found-related-to-polythene-bags-1789965267

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.