முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீர்கொழும்பு சிறையில் ரத்தக்களரி! 25 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

அதன்படி இந்த வன்முறைச் சம்பவங்களில் 5  சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,

100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப விசாரணைகளின்படி, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில்  “பூரு மூனா” பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் செல்வாக்கின் கீழ் இந்த மோதல் நடைபெற்றதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது. 

நேற்று (05) பிற்பகல் விளக்கமறியல் கைதிகளுக்கும் தண்டனை அனுபவித்து வந்த கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் இந்த வன்முறைச் சம்பவங்களால் மொத்த உயிரிழப்பு 27 ஆக பதிவாகியுள்ளது. 

 காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 4 சிறை அதிகாரிகள், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த அதிகாரிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகின்றது. 

மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றதுடன் சிறைக்குள் வெடித்த மோதல் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Source: https://samugammedia.com/bloodshed-at-nirkolumbu-prison-25-dead-over-100-injured-1783326479

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.