ரணில் இயலும் என்று சொன்னாலும் புலமை பரிசில் பரீட்சையேனும் முறையாக நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விமர்சித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய நகரில் இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் பேரணியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்க ‘இயலும்’ என்று சொல்கின்ற போது, அவருடைய சகாக்கல் அநுரகுமார திசாநாயக்கவால் ‘இயலும்’ என்று சொல்கின்றார்.
அநுர குமாரவிடம் கேள்வி
புலமை பரிசில் பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது,பரீட்சைக்கு முன்பு இந்த வினாத்தாளை வெளியிட்டது யார் என அநுர குமார திசாநாயக்க விடம் கேட்கின்றோம்.
எந்தப் பிரதேசத்துக்குரிய எந்த கட்சிக்குரியவர் இதனை லீக் செய்தார் என அவரிடம் கேட்கின்றோம். அநுர குமார திசாநாயக்க இதற்கு விடையளிக்க வேண்டும்.
இன்று வினாத்தாளை தயாரித்தவர்களும் லீக் செய்தவர்களும் அரசியல் ஜோடியாக மாறி இருக்கின்றார்கள். இந்த அரசியல் திருமணம் 21 ஆம் திகதியோடு விவாகரத்தாகும்” என்றார்.