முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேர்மையான அரச சேவையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி!

அரசுத் துறைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில், “Clean Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் “நேர்மை வாரம்” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்வாக, வவுனியாவில் “நேர்மை நடை (Integrity Walk)” எனும் விழிப்புணர்வுப் பேரணி இன்று  காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேரணி, இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்டச் செயலக வளாகத்தில் இருந்து எழுச்சியுடன் ஆரம்பமானது

“நான் ஊழல் செய்யாதவன்… எனது சேவை தூய்மையானது!” எனும் தொனிப்பொருளிலும், பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியவாறு அதிகாரிகள் பேரணியாகச் சென்றனர்.

அரச சேவையில் ஊழலற்ற நேர்மைக் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நடைபெற்ற இந்த பேரணியில் பல தரப்பினரும் திரளாகவும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டச் செயலகம், வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் , இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம் மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் , தேசிய இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் Clean Sri Lanka திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்

பொதுச் சேவையில் நேர்மைத் தன்மையை பேணுவதுடன், அரச நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு வலுவான விழிப்புணர்வு நிகழ்வாக இது அமைந்தது.

அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையின் நேர்மையை பறைசாற்றும் வகையில் பங்கெடுத்த இந்நிகழ்வு, வவுனியா பகுதியில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

Source: https://samugammedia.com/awareness-walk-in-vavuniya-emphasizing-honest-public-service-1785223551

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.