பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு மாதாந்த அமர்வு தவிசாளர் வின்சன் தீபால் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை 9 மணி அளவில் படுத்துதுறை நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது
இதில் கடந்த மாத கூட்டம் அறிக்கையை ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டதுடன் நிதி குழு கூட்ட அறிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டன.
மேலும் திக்கம் முனை விளையாட்டு மைதானத்தினை பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான சபை அனுமதி தொடர்பாகவும், உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்பு மானிய பயனாளிகள் தெரிவி தொடர்பாகவும் ஆராயப்பட்டது
தொடர்ந்து வருட நடப்பு வருடத்தின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நகரத்தின் தேவைப்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள், வரவு செலவு திட்டத்தினை பெற்றுக் கொள்வதற்கான சபை அனுமதியும் நகர சபை பொது இடங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பான தீர்மானங்களும் பயிலுனர்கள் இருவரை நியமிப்பதற்கான சபை அனுமதியும், நவீன சந்தை கடை C11 இதற்கான வாடகை ஒப்பந்த பெயர் மாற்றம் தொடர்பாகவும் சபையில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இன்று அமர்வில் அனைத்து உறுப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
Source: https://samugammedia.com/monthly-session-of-the-pedro-city-council-1782116718

