கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: https://samugammedia.com/youth-dies-after-being-electrocuted-in-a-tree-1783744322

