முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாநகர திரவக்கழிவகற்றல் குத்தகைதாரர்களுடன் முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் தனியார் திரவக்கழிவகற்றல் சேவைகளை வழங்கும் குத்தகைதாரர்களுக்கும் மாநகரசபை முதல்வர் திருமதி.வி.மதிவதனி அவர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த (8) முதல்வர் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் அறையில் இடம்பெற்றது.

இதன் போது தனியார் குத்தகைதாரர்களாக திரவக்கழிவகற்றல் சேவைகளை வழங்கும் பவுசர்கள் மூலமாக அதில் பணிபுரிபவர்கள் மூலமாக சட்டத்திற்கு முரணாகவும், அனுமதி இன்றி பொது இடங்களில் திரவக்கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் அதிகரித்த முறைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தனியார் திரவக்கழிவகற்றல் சேவையை வழங்கும் வாகன உரிமையாளர்களான குத்தகைதாரர்களுக்கு முதல்வரால் இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் தனியார் திரவக்கழிவகற்றல் சேவைகளை மாநகர எல்லைக்குள் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்ற விடயம் மீண்டும் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டதுடன், அவர்களது குறைபாடுகள், இரவு சேவை முடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அவர்களது தேவைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முதல்வரால் தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

எதிர்காலத்தில் தொடர்ந்தும் எவ்வித குறைபாடுகளும் இன்றி நிறைவான சேவையை மாநகரத்தில் வழங்குவதை குத்தகைதாரர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவை மீறப்படும் சந்தர்ப்பங்களில் குத்தகை ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் மாநகரசபை உறுப்பினர்கள், ஆணையாளர், பொறியியலாளர், தனியார் திரவக்கழிவகற்றல் குத்தகைதாரர்கள் மற்றும் மாநகர துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Source: https://samugammedia.com/special-discussion-led-by-the-chief-minister-with-municipal-sewerage-tenants-1789178273

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.