முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வு!

மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் தொடர்பான கருத்தாடல் அரங்கானது இன்றையதினம் கரைதுறைப்பற்று பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் கருத்தாடல் இன்றையதினம் (21.06.2026)  காலை 10 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் வரை இடம்பெற்றிருந்தது.

இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் மௌன வணக்கம் செலுத்தப்பட்டு  மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலில் மாகாணசபை முறைமையும் அதிகார பகிர்வு கலந்துரையாடலானது மாகாணசபை இன்றைய தமிழ் அரசியலின் உயிர்நாடி, சமஷ்டிக்கான வழித்தடமாக மாகாணசபை, நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்தில் மாகாணசபைக்கான அதிகாரங்களும் அதன் வீச்செல்லைகளும் மாகாண காவல்துறை அதிகாரிகங்களும் வீச்செல்லைகளும்  ஆகிய தலைப்புகளில் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

குறித்த கருத்தாடலின் போது மூலோபாயக் கொள்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் நிறுவக இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான ஆ.யதீந்திரா, யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கோசலை மதன், மூத்த கல்வியியலாளர் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமாரன், யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை முதுநிலை விரிரையாளர் கலாநிதி K.T.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.  

வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையில் ஆரம்பமான இவ் கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள்,  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சந்திரகுமார் ,முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், மாந்தைகிழக்கு உப தவிசாளர் ச.சத்தியவரதன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களான க.விஜிந்தன், க.தவராசா ,பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர் அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமையின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட இந்நிகழ்வு பயனுள்ள கலந்துரையாடல் அரங்கமாக அமைந்திருந்தது.

Source: https://samugammedia.com/provincial-council-system-and-power-sharing-in-mullaitivu-1782129363

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.