முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலைக்கழக சம்பவம்: குறுகிய குழுக்களின் இனவாதச் சதிக்கு பலியாக வேண்டாம்! ‘மாணவர் பேரவை’ அழைப்பு!

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுதிப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து அரசாங்கம் சாதகமான பதிலளித்துள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின்  அழைப்பாளர் சசிந்து பெரேரா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டார். 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது அன்றாடப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு மேலதிக நிதித் தேவைப்படுவதைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘மஹாபொல’ புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக 5,000 ரூபாயை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இது தமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த சாதகமான பதில் என்பதால் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை என்ற ரீதியில் இந்நடவடிக்கையை தாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அழைப்பாளர் சசிந்து பெரேரா, நாட்டில் மீண்டும் ஒரு இனவாத அலையை உருவாக்குவதற்கு சில குறுகிய குழுக்கள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘வெசாக் கூடு’ என்பது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே உருவாக்கிய ஒன்றாகும் என்றும், நாட்டில் நிலவும் இனவாதப் போக்குக்கு கூட்டுப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கெடுத்திருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 மாணவர்களின் இந்த ஒற்றுமையைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிறிய குழுவினரே இச்சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளார்களே தவிர, இது ஒட்டுமொத்த சிங்கள அல்லது தமிழ் மாணவர்களின் செயல் அல்ல என அவர் தெளிவுபடுத்தினார். 

எனவே, இவ்வாறான குறுகிய அரசியல் சூழ்ச்சிகளுக்குள் சிக்கி யாரும் கலக்கமடைய வேண்டாம் எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களும் பொதுமக்களும் இதில் நிதானமாகச் சிந்தித்து அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நீண்டகாலமாகப் பல்கலைக்கழகங்களில் நிலவி வரும் விடுதிப் பற்றாக்குறைக்கு, மாணவர் அமைப்புகள் என்ற ரீதியில் தாம் கொடுத்த தொடர் அழுத்தங்கள் காரணமாக தற்போது சாதகமான முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

அதனடிப்படையில், உயர்தொழில்நுட்பவியல் தேசிய நிறுவன (HND) கல்வி முறைமையிலும் விடுதிப் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், பல்கலைக்கழக கட்டமைப்பில் திட்டமிடப்பட்டுள்ள 55 விடுதிகளில் முதற்கட்டமாக 13 புதிய விடுதிகளைக் கட்டும் பணிகளை கல்வி அமைச்சு இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இது அரசாங்கத்தின் சாதகமானதொரு தலையீடு எனக் குறிப்பிட்ட அவர், இனங்களை பிரித்து வைத்து அரசியல் லாபம் தேட நினைக்கும் மற்றும் தொடர்ந்தும் இவ்வாறான தடைகளை ஏற்படுத்த நினைக்கும் இனவாதக் குழுக்களின் தூண்டுதல்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களோ அல்லது பொதுமக்களோ பலியாகக் கூடாது என வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/jaffna-university-incident-do-not-fall-victim-to-the-racist-plot-of-small-groups-student-union-call-1780554089

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.