
ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஊடகப் பணிப்பாளராக இருந்த சானக கருணாரத்ன, இணையதளங்களில் வெளியான செய்தியைக் காட்டி ‘ஏ.கே.டி’ (A.K.D) உங்களைக் காண வந்தாரா என்று, ரணிலிடம் வினவினார்.
“ரணிலைச் சந்தித்த அந்தப் பிரபல்யமான அரசியல்வாதி யார்? என்றுதான் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது” என்று சானக மீண்டும் அவரிடம் கேட்டார்.
ரணில் அமைதியாக இருப்பதைக்கண்ட சானக, மீண்டும் வினவினார்.
அதற்கு ரணில், “அப்படி ஒருவரையல்ல, நான் சந்திக்கும் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்” என்று கூறி, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் மௌனமாகிவிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “அரசாங்க இயந்திரத்தை இயக்குவதற்கு வெளியிலிருந்து ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். இவர்களைப் பதவிகளில் அமர்த்துவது, கட்சி அனுமதித்தால் மட்டுமே நடக்கும். இவர்களுக்குத் தங்கள் தரப்பு ஆதரவு இல்லை என்றால், அரசாங்கத்தை நடத்த முடியாது” என்று ரணில் பதிலளித்தார்.
தற்போதைய ஆட்சியில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது; டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ரணிலைச் சந்தித்தபோது முன்னாள் ஊடகப் பணிப்பாளர் இந்த வினாக்களை எழுப்பினார்.

