Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம் சட்டத்தரணி கே.ஏ.பி. ரணசிங்க தற்காலிக பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தற்காலிக நியமனம் 2024ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் நாளைய தினம் (01.07.2024) பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை
மேலும், ரணசிங்கவின் பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டமை அவரது தற்போதைய பொறுப்புகளுக்கு மேலதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டு தடவைகள், முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தது.
இதனையடுத்து, சட்டமா அதிபர் பதவியில் இருந்து சஞ்சய் இராஜரட்ணம் ஓய்வு பெறுவது அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது புதிய பதில் சட்டமா அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.