முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வங்காள விரிகுடாவில் 2 புயல்கள் உருவாகலாம்! வடக்கு கிழக்கில் இனி மழை

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதனால் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது  என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

அவரது பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவிக்கையில் 

திருகோணமலை மாவட்டத்திற்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தற்போது மத்திய, சப்ரகமுவ,  ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 06.08.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. 

ஏற்கெனவே இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும், பல பகுதிகளிலும்  மண் நிரம்புநிலையை எட்டியுள்ளதனாலும் இம்மாகாணங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதனால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம். 

மத்திய பசிபிக் பெருங்கடலில் மிக வலுவான எல்நினோ உருவாகிக் கொண்டுள்ளது. நேற்றைய தினம் (02.08.2026) நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 2. 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது. 

எல்நினோவின் தொலை இணைவு வடமேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் ஆப்பிரிக்காவுக்கு கிழக்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அது இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதி நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. 

ஆரம்பத்தில் எதிர்பார்த்ததற்கு மாறாக எல்நினோவின் உச்சம் முன்கூட்டியே அதாவது செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்பதோடு எல்நினோவின் உச்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எதிர்வரும் 2027 ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

செப்டெம்பரின் இறுதிப்பகுதி வரை வெப்ப அதிகரிப்பு காணப்படும். அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம் மற்றும் மிகக்குறைந்த மழை வீழ்ச்சி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு பெரும் நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும்.

ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக அதிக தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இம்முறை இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதிகளில் குறைந்தது 06 தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவற்றில் இரண்டு தாழமுக்கங்கள் புயல்களாக உருவாகும் வாய்ப்புள்ளன. 

எனவே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகம் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 900 மி.மீ. இனை விட அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

ஆனால் தாழமுக்க செயற்பாட்டினாலேயே இம்மழை கிடைக்கும் என்பதனால் குறைந்த மழை நாட்களில் அதிக மழை கிடைக்கும். இதனால்  வெள்ள அனர்த்தங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. 

குறிப்பாக ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக வங்காள விரிகுடாவில் இந்து சமுத்திரத்தின் சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் என்ற அளவில் காணப்படுவதுண்டு. இது அதிகரிக்கும் போது தாழமுக்கங்கள்/ புயல்கள் உருவாகுவதுண்டு என தெரிவித்துள்ளார். 

Source: https://samugammedia.com/two-storms-could-form-in-the-bay-of-bengal-more-rain-in-the-northeast-1785731813

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.