முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெள்ள அபாயம்: பேராதனைப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. 

 மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் “சரசவி மெதுர” விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

​எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

​அதற்கமைய, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன: 

​தமது சொந்தப் பிரதேசங்களுக்குப் பாதுகாப்பாகப் பயணிக்கக்கூடிய மாணவர்கள் அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியும்.சீரற்ற வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், ‘சரஸவி மெதுர’ விடுதியைத் தவிர்த்து, பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்துத் தங்கியிருக்க முடியும். 

​அபாயகரமான தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்புக்காகப் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருகை தந்தால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளைப் பேணுமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

​எந்தவொரு மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் பல்கலைக்கழகம் வலியுறுத்துகிறது. 

​தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை பல்கலைக்கழக சமூகத்தினர் தமது பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறு பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Source: https://samugammedia.com/flood-danger-educational-activities-at-peradeniya-university-suspended-1785750629

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.