அண்மையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தலவாக்கலை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீடியாகொட மற்றும் பண்டாரகம பகுதிகளில் நேற்று, நேற்று முன்தினம் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீடியாகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மலவான பகுதியில் கடந்த 1ம் திகதி நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துல பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர் ஓருவரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட லிந்துல பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்து ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி பண்டாரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொல்கொட பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஓருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் பாணந்துறை தெற்கு பகுதியில் வைத்து களுத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படட்வர் பாணந்துறை ஹிரண பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

