2023 (2024) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவரும் காலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பரீட்சை பெறுபேறு
அத்தோடு, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/2023-ol-exam-result-release-date-1724760295?itm_source=parsely-popular

