யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சற்று முன்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்காகவே இன்றைய தினம் (16) நீதிமன்றில் முன்னிலையானார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
யாழ்.போதனா வைத்தியசாலை
வழக்கு விசாரணையின் போது வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் உள்நுழைய முடியாது என்ற கட்டளையை நீதிமன்றம் வழங்கியுள்ளதுடன் குறித்த இருவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் வழக்கின் அடுத்த விசாரணைகள் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை மேலும் தொடர்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி தனஞ்சயனும் வைத்தியசாலை நிர்வாகம் சார்பாக சட்டத்தரணி குருபரனும் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் – பு.கஜிந்தன்
https://www.youtube.com/embed/vTBD9DF87LA