யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண காவல்துறையினரினால்
கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட
நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு
பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், 90 லீற்றர் கோடா, சாராயம் மற்றும்
போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ்
அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் 11பேர் புனர்வாழ்வு
மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.