இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை மொத்தம் 3,694 இலங்கையர்கள் தென்கொரியாவில்(South Korea) வேலைக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
மேலும், 100 நபர்கள் விரைவில் வெளியேற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தரவுகளுக்கமைய, உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக எட்டு பெண்கள் உட்பட 100 பேர் கடந்த (6)ஆம் திகதி தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்புகளின் ஒரு பகுதியாகும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தென் கொரியாவில் வேலை
2004 இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து, இலங்கையர்கள் தென்கொரியாவில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிந்து வெளியேறி வருகின்றனர்.
இலங்கையில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தென்கொரியாவில் வேலை தேடும் போக்கு அதிகரித்து வருகிறது, மேலும் அதிகமான இளம் பெண்களும் இந்த வேலை வாய்ப்புகளைத் தொடர்கின்றனர்.
தற்போது, தென் கொரியாவில் பதவிகளுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன, பல தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு எதிர்காலத்தில் வெளியேற உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.