முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல்துறை திணைக்களத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோப்ப நாய்கள்

இலங்கை காவல்துறை திணைக்களத்திற்காக நெதர்லாந்தில் (Netherlands) இருந்து 5 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான 35 நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

குறித்த நாய்கள் இன்று (5) அதிகாலை ஏர்வேஸ் விமானம் KR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நாய்களில் 13 பெல்ஜிய மாலினாய்ஸ் (Belgiam Malinois) நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் (English Spaniel) நாய்கள் என்பன விலங்குப் பண்ணையில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

நாய்கள் இறக்குமதி

விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இந்த நாய்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை திணைக்களத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோப்ப நாய்கள் | 35 Dogs From Netherlands For Sl Police Department

இதன்போது, கருத்து தெரிவித்த நிஹால் தல்துவ (Nihal Thalduwa), “இந்த நாய்கள் 08 முதல் 12 மாதங்களுக்கு இடைப்பட்டவை, 03 மாத பயிற்சியின் பின்னர் இலங்கை முழுவதிலும் உள்ள உத்தியோகபூர்வ காவல் நிலையங்களின் நாய்ப் பிரிவுகளில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாய்களை இறக்குமதி செய்வதால் ஏற்படும் அதிக செலவை குறைக்கும் வகையில் இந்த நாய்களை பயன்படுத்தி புதிய இனவிருத்தி செயல்முறையை இந்நாட்டில் ஆரம்பிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

போதைப் பொருட்கள்

குறிப்பாக, இந்த நாய்கள் போதைப்பொருட்களைக் கண்டறியவும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.

காவல்துறை திணைக்களத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோப்ப நாய்கள் | 35 Dogs From Netherlands For Sl Police Department

தற்போது, காவல் நிலைய உத்தியோகபூர்வ நாய் பிரிவில் 372 நாய்கள் உள்ளன, இதில் 35 நாய்கள் பயிற்சியின் பின்னர் காவல் நிலைய பிரிவில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.