வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித
மைக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் 175 புள்ளிகளைப்பெற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு அரசடியை சேர்ந்த ஒய்வுபெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர்
ஆனந்தநாயகம்-நளாயினி தம்பதியினரின் புதல்வரான அகர்வின் இந்த சாதனையினை
படைத்துள்ளார்.
மாவட்டத்தில் முதலிடம்
குறித்த மாணவனின் இல்லத்திற்கு சென்ற மட்டக்களப்பு வலய கல்வி
பணிப்பாளர் தி.ரவி தலைமையிலான குழுவினர் மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு வலயத்தின் கல்வி பணிப்பாளர்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்
மற்றும் ஆசிரியர்கள்,உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி மகேந்திரகுமார்
மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியர்,வலய கல்வி அலுவலகத்தின்
அதிகாரிகள்,பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.








Source: https://tamilwin.com/article/5-scholarship-examination-batticaloa-first-place-1788640703

