முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 5 வயது சிறுமி

யாழில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சிறுமியொருவர் போகும் வழியிலேயே  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (28.04.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5
வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணை

சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச
வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்றபோதே சிறுமி உயிரிழந்துள்ளார்.

யாழில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 5 வயது சிறுமி | 5 Year Girl Died On The Way To Hospital In Jaffna

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள
நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/5-year-girl-died-on-the-way-to-hospital-in-jaffna-1714314592

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்