மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் (Chad) இராணுவ வெடிபொருள் கிடங்கில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தானது நேற்று (18) இரவு சாட் நாட்டின் ஜமீனாவில் உள்ள இராணுவ வெடிபொருள் கிடங்கில் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிவிபத்து
இதன்போது, அரைமணி நேரத்திற்கும் மேலாக வெடிபொருட்கள் வெடித்ததில் அருகே இருந்த கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இரங்கல்
இந்த விபத்து தொடர்பில், அந்த நாட்டின் அதிபர் மஹமத் டெபி (Mahamat Deby) இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.