முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம்

மாலைதீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு 2018ல் ஊழல் செய்ததாக அறிக்கை கசிந்ததால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவின் அதிபராக சீன சார்புடையவராக இருக்கும் முகமது முய்சு பதவி வகித்து வரும் நிலையில், அந்நாட்டின் மஜ்லிஸ் எனப்படும் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாலைதீவு அதிபர் முகமது முய்சு கடந்த 2018ஆம் ஆண்டு ஊழலில் ஈடுபட்டதாக, நிதி புலனாய்வு அமைப்பு மற்றும் மாலைதீவு காவல்துறை இணைந்து தயாரித்ததாக கூறப்படும் அறிக்கை அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது.

வீழ்ச்சியடையும் பொருளாதாரம்: மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் முயற்சியில் மாலைதீவு!

பதவி நீக்க வேண்டும்

அந்த அறிக்கையில், மாலைதீவு அதிபர் முய்சுவின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நடந்த பணப் பரிமாற்றங்களில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, நிதி ஆதாரத்தை மறைக்க தனியார் நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம் | Corruption Report Leak Maldives President Problem

இந்நிலையில், எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி மற்றும் மக்கள் தேசிய முன்னணி ஆகியவை, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிபர் முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

அதலபாதாளத்தில் சுற்றுலாத்துறை! இந்தியாவின் உதவியை நாடும் மாலைதீவு

பழி சுமத்த முடியாது

இந்த குற்றச்சாட்டுகளை அதிபர் முகமது முய்சு மறுத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியில் இருந்தன. நான் தவறு செய்திருந்தால் அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம் | Corruption Report Leak Maldives President Problem

என் மீது எந்த தவறையும் அவர்களால் கூற முடியாது. முன்னர் மேயர் மற்றும் அதிபர் தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டை கிளப்பினர், இதை எவ்வளவு காலத்திற்கு பேசினாலும், என் மீது பழி சுமத்த உங்களால் முடியாது.” என்றார்.

முறுகல் நிலையிலும் மாலைதீவுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்