முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரும் ஆசியக்கண்டம் – அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்

பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தான், திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று (02.04.2025) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலையில் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

மியான்மர் (Myanmar) மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த நில அதிர்வுகள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இன்று (2.04.2025) அதிகாலை 2.58 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிரும் ஆசியக்கண்டம் - அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் | Earthquake Struck Three Countries Today

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதோடு பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.53 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதிரும் ஆசியக்கண்டம் - அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் | Earthquake Struck Three Countries Today 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

திபெத்

திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 5.49 மணியளவில் ( இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்