முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி

புதிய இணைப்பு

 உமா ஓயா பல்நோக்கு நீர்மின் திட்டத்தை ஆரம்பித்து வைக்க
இலங்கை வந்த  ஈரான் ஜனாதிபதி
இப்றாஹிம் ரைசியிக்கு
ஈரானின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று
விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளது.

மத்தள விமான நிலையத்தில்
இறங்கி உமா ஓயா செல்லும் வரையும்
பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறும் வரையிலும் இந்த விசேட
சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் மொசாட்
அமெரிக்க எஃப்.பி.ஐ உளவுப்
பிரிவுகள் ரைசியின் பயண எல்லைகள் வரை துப்புத் துவக்குவதாக
ஏற்கனவே செய்திகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியால் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி | Iranian President Arrived In The Country

முதலாம் இணைப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) இன்று காலை மத்தளை விமான நிலையத்தின் ஊடாக  இலங்கையை வந்தடைந்துள்ளார். 

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். 

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை  பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்த்தன(Dinesh Gunawardena), வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி | Iranian President Arrived In The Country

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு
நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதுடன், 2008 ஏப்ரல்
மாத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதிநெஜாட்டின் இலங்கை
விஜயத்திற்குப் பின்னர், ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது
இதுவே முதல் தடவையாகும்.

பலத்த பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதி | Iranian President Arrived In The Country

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்
வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது
கைச்சாத்திடப்படவுள்ளன.

மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக
வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும்
இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. 

மேலதிக தகவல்கள் – ராகேஸ்

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : 15000 கோடி ரூபா பெறுமதி

உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : 15000 கோடி ரூபா பெறுமதி

மனித உரிமை மீறல்களில் பாராமுகமாக செயற்படும் இலங்கை அரசு: அமெரிக்கா குற்றச்சாட்டு

மனித உரிமை மீறல்களில் பாராமுகமாக செயற்படும் இலங்கை அரசு: அமெரிக்கா குற்றச்சாட்டு

மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.