பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற மவுலின் ரூஜ் (Moulin Rouge) கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை விசிறிகள் உடைந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று(25) அதிகாலை 2 முதல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செல்லப்பிராணியால் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்
சேதம் ஏற்படும் அபாயம்
விசிறிகள் உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இந்த விபத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றாலை விசிறிகளால் சேதம் ஏற்படும் அபாயம் இல்லை எனவும் பாரீஸ் நகர தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Les joies d’aller bosser à 3h : se retrouver nez à nez avec l’hélice du moulin rouge tombée par terre pic.twitter.com/Xi9zI0TJHu
— Adélaïde Malavaud (@AMalavaud) April 25, 2024
கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும் பலர்