வெளிநாடு ஒன்றில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான உதவியாளர் ஒருவர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கஞ்சா விநியோகிப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 25 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட சாமர நிரோஷன் என்ற 47 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் உறவு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜூலி சங்

பொலிஸார் விசாரணை
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடுவெல வெலவிட்ட பகுதியில் உள்ள வீட்டில் மேலும் 23 கிலோ கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது மற்றுமொரு நபருக்கு வழங்குவதற்காக இரண்டு கிலோ கேரள கஞ்சாவை சந்தேகநபர் வைத்திருந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்த இளம் பெண் : சர்ச்சையை தோற்றுவிக்கும் அதிர்ச்சிக் காணொளி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

