சிறுவர் பாடசாலை (மொன்டிசோரி) ஆசிரியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘மியிஜய செவன’ தொடர்மாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மாதம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகலின் அடிப்படையில் தோடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வீட்டில் சோதனை செய்த போது, ஆசிரியரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
அந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியிடம், தனது கணவர் தொடர்பில் விசாரித்த போது அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வருதாக கிடைத்த தகவலின் பேரில் காத்திருந்த பொலிஸார்.

வீட்டுக்கு வந்த கணவன் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அதில் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

32 வயதான ஆசிரியரும் அவரின் கணவரும் இணைந்து நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

