உக்ரைனுக்கு நீண்ட கால இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த இராணுவ ஆயுத உதவியானது ஆறு பில்லியன் டொலர் பெறுமதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் நேறையதினம்(26) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்: பறிபோன கருப்பினத்தவர் உயிர்
ஆயுத உதவி
இதனடிப்படையில் இந்த நடவடிக்கையானது உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளில் மிகவும் அதிக தொகைக்கு வழங்கப்படும் உதவியென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் உக்ரைனிய இராணுவத்திற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியுமென கூறப்பட்டுள்ளது.
இதில் ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான முக்கியமான இடைமறிப்பு ஆயுதங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவு பீரங்கி வெடிமருந்துகள் உட்பட்ட ஆயுதங்கள் அடங்கும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கவுள்ள விமானம்
எதிர்ப்பு ஆயுதங்கள்
முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த புதன்கிழமை(23) உக்ரைனுக்கான 95 பில்லியன் டொலர் கூடுதல் உதவிப் பொதியில் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து அமெரிக்க பங்குகளில் இருந்து உக்ரைனுக்கு அண்மையில் ஒரு பில்லியன் ரூபா உதவி தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிவிப்பு வெளியாகி சில நாட்களுக்குள் ஆறு பில்லியன் ரூபா நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுடனான இலங்கையின் நட்புறவு தொடர வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |