முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவுக்கு பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் அதிபராக இந்த வருட மே தினக் கூட்டத்தில் பங்கேற்கின்றார் என பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐ.தே.க.வின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் உத்தேச அதிபர் தேர்தலை மையப்படுத்தி பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

பிக்குமாரின் பின்னணியை மறைக்கும் மகிந்தானந்த: சபா குகதாஸ் கேட்ட கேள்வி

பிக்குமாரின் பின்னணியை மறைக்கும் மகிந்தானந்த: சபா குகதாஸ் கேட்ட கேள்வி

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் புதன்கிழமை (மே 01) 2 மணிக்கு கொழும்பு – மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு | Announcement Of Presidential Election On May Day

இதேவேளை உத்தேச அதிபர் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் அதிபர் ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாகவும் அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.

வருட இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்டுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி: விமர்சிக்கும் டக்ளஸ்

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி: விமர்சிக்கும் டக்ளஸ்

முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளை கடந்த வாரத்தில் சந்தித்திருந்த அதிபர் உத்தேச தேர்தல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதிபர் தேர்தல் குறித்து மே தினத்தில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு | Announcement Of Presidential Election On May Day

இந்த சந்திப்பில் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa), பிரதமர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் டிரான் அலஸ் (Tiran Alles) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் இதன்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.

இதனை மையப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்க ஏனைய கட்சிகளுக்கு முதல் கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த - கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: லக்ஷ்மன் கிரியெல்ல சாடல்

மகிந்த – கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: லக்ஷ்மன் கிரியெல்ல சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.