முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜே.வி.பி ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் முன்னாள் அதிபர்கள்! அனுர சாடல்

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுக்கும் வகையான நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருவதாக அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   

இதன்படி, முன்னாள் அதிபர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கட்சிகள் இணைந்து, தமது கட்சிக்கு எதிராக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவீடனுக்கு பயணம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க, ஸ்டாக்ஹோம் பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே, இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் தரப்பினர்

இதன் போது மேலும் கருத்துரைத்த அவர், “இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள் இயற்கையாக தோன்றியவை அல்ல. இலங்கையை ஆட்சி செய்யும் அரசியல் தரப்பினரின் சுயநல நடவடிக்கைகளால் ஏற்பட்டவை.

ஜே.வி.பி ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் முன்னாள் அதிபர்கள்! அனுர சாடல் | Political Parties Against Jvp Regime Anura Swedan

உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!

உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் இலங்கை!

இதனை நாம் மாற்ற வேண்டும். எனினும், இந்த ஆட்சி மாற்றத்தை எதிர்த்து தற்போது ஆட்சியில் உள்ள தரப்பினர் செயல்படுகிறார்கள்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எமக்கு எதிராக செயல்படவுள்ளன.

முறுகல் நிலை

இதற்கான நடவடிக்கைகளை கட்சியின் தலைவர்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் அதிபருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசாவுக்கு இடையில் தொடரும் முறுகல் நிலை இதற்கு தடையாக உள்ளது.

ஜே.வி.பி ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் முன்னாள் அதிபர்கள்! அனுர சாடல் | Political Parties Against Jvp Regime Anura Swedan

ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தரப்பு!

ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தரப்பு!

கொள்கைகள் ரீதியில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்படாது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை தடுக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு அரசியல் கட்சிகள் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

அதிபர் தேர்தல்

இந்த ஆண்டின் செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும்.

அதிபர் தேர்தலின் மூலம் எமது நாட்டின் நிலையை மாற்ற முடியும். இந்த தேர்தலில் வாக்களிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

வேகமாக அதிகரிக்கும் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை!

வேகமாக அதிகரிக்கும் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/diXYF5eUsCQ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.