ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், பிரபல இயக்குநருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் கூட லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. இப்படம் வெளிவந்த சமயத்தில் பேசப்படவில்லை என்றாலும், தற்போது இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
தன்னை தானே செதுக்கியவன்.. நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
லால் சலாம் படத்திற்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் அடுத்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய வீடு
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் உள்புற வேலைகள் முடிந்த நிலையில், தனது தந்தை ரஜினிகாந்த் தாய் லதா மற்றும் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் சென்று பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Candid Moments of Thalaivar with his wife Latha Rajinikanth❤️#Rajinikanth #Thalaivar #LathaRajinikanth #AishwaryaRajinikanth #Coolie #Vettaiyan #Cineulagam pic.twitter.com/11Gb4xIsvV
— Cineulagam (@cineulagam) April 30, 2024