அதிபர் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியாவிலிருந்து மக்களை அழைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டத்திற்காக இந்திய பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், “ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான ரணில் விக்ரமிங்க மே தினக்கூட்டத்துக்கான இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைத்துள்ளார்.

மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி
இந்தியாவிலிருந்து வந்த நபர்கள்
விமான நிலையத்தை சென்றடைந்த குறித்த தரப்பினரை சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர், ரணில் விக்ரமசிங்க ஒரு விடயத்தை நன்கு அறிந்துள்ளார்.

அவருக்கு ஆதரவளிக்கவும் அவரது கட்சி கூட்டத்தில் பாடவும் இந்தியாவிலிருந்தே நபர்களை அழைத்து வரவேண்டியுள்ளது.
இதற்கமைய, தேர்தலில் அவருக்கு வாக்களிக்கவும் இந்தியாவில் இருந்தே அவர் ஆதரவாளர்களை அழைத்து வர வேண்டும்.
ரணிலின் நடவடிக்கைகள்
இலங்கையர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
ரணிலின் நடவடிக்கைகள் அவருக்கு ஒழுக்கம் இல்லை என்பதை பிரதிபலிக்கிறது.

நாம் எமது கட்சியை மற்றுமொரு கட்சிக்கு எதிராக கட்டியெழுப்ப மாட்டோம். அவ்வாறு கட்டியெழுப்பப்படுவது ஒரு கட்சியே இல்லை” என கூறியுள்ளார்.
அத்தோடு, இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கிய ஊழல்வாதிகளின் ஆட்சியின் கீழ் கொண்டாடப்படும் இறுதி மே தினமாக இன்றைய தினம் அமையும் என்றும் ஊழல்வாதிகளின் ஆட்சியின் கீழ் இலங்கையில் அடுத்த மே தினம் கொண்டாடப்படாது என்றும் அனுரகுமார வலியுறுத்தியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது: வெடித்தது சர்ச்சை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |
https://www.youtube.com/embed/ZabnaU8Or84

