தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில்
சிறப்பாக நடைபெற்றுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் இன்று (01.05.2024) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விசேட
அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்
பிரேமதாச (Sajith Premadasa) கலந்து கொண்டுள்ளார்.

இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
மே தினக் கூட்டம்
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், மே தினத்தையொட்டியும் ஹட்டன்
சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க, தொழிலாளர் தேசிய
சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
மயில்வாகனம் உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மத்திய மாகாண சபை
உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, பிரதேச சபை உறுப்பினர்கள்,
கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவிட் தடுப்பூசி: இந்திய மருத்துவர்கள் வெளியிட்டுள்ள தகவல்

யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து: ஒருவர் பலி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








