இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர அடிப்படையில் மத்திய வங்கி அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்தமையே நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்புக்கு முக்கியமாக காரணமாகும்.
அதிபர் தேர்தல் : கருத்துக் கணிப்பில் முந்திய சஜித்
வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி
இந்த உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணி வசதியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,139 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9.8 வீத அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில்துறைப் பொருட்களின் ஏற்றுமதியின் அதிகரிப்பு முக்கியமாக ஏற்றுமதி வருவாய் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.
உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
சுற்றுலா வருமானம் அதிகரிப்பு
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளதுடன் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் மார்ச் மாதத்தில் 572 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, யூரோ, ஸ்டேர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை: வெளியானது எச்சரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |