நடிகை ஸ்ரீதேவி
இந்திய சினிமாவே மிகவும் பெருமையாக கொண்டாடிய ஒரு நடிகை ஸ்ரீதேவி.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக திகழ்ந்தார்.
பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே கடந்த 1996ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது ஸ்ரீதேவியை போல அவரது மகள்களும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பே நடிகை வரலட்சுமிக்காக அவரது வருங்கால கணவர் செய்துள்ள விஷயம்- அட செம போங்க
ஸ்ரீதேவியின் வீடு
நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னையில் கடற்கரையோரம் பெரிய பங்களா ஒன்று உள்ளது, அதில் தான் அவரும் வசித்து வந்தார்.
நடிகையின் மறைவுக்கு பிறகு அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு தற்போது அதனை தனது அலுவலகமாக போனி கபூர் பயன்படுத்தி வருகிறார்.
தற்போது Airbnb நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கு ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்க உள்ளது, இதற்கான முன்பதிவு மே 12ம் தேதி முதல் தொடங்க இருக்கிறதாம்.
இந்த அறிய வாய்ப்பை பெற உள்ளவர்கள் அந்த வீட்டில் ஒருநாள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, ஜான்வி கபூர் உடன் சேர்ந்து உரையாடவும், உணவருந்தவும் முடியுமாம்.