முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கே: பகிரங்கமாக தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன்

முதல் வாக்கு தமிழ் வேட்பாளருக்கும் 2ஆம் 3ஆம் வாக்குகள் விரும்பிய
வேட்பாளருக்கும் வழங்குவது உத்தி என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneswaran) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (01.05.2024) இடம்பெற்ற தமிழ்த் தேசிய மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வாசுவும் நானும் சம்பந்திகள். அப்போது மேதின கூட்டங்களுக்கு நாங்கள்
செல்வதுண்டு.

அந்த நேரம் சிறீதரன் சிறு பிள்ளையாக இருந்திருப்பார்.

பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த

பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த

போராட்ட மன நிலை

மே
தின நிகழ்வுகளில் அரசியல் தற்போது உள்ளது. இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள் ஊடாக உரிமைக்காக போராடியவர்
செளமியமூர்த்தி தொண்டமான்.

அவர், மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம்
உரிமைக்காக குரல் எழுப்பியிருந்தார். எமது சந்ததிக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் போராட்ட வடிவத்தை மாற்றி
போராட வேண்டும்.

மேலும், போராட்ட மன நிலையை கைவிட்டால் நாங்கள் இழந்த உரிமைகளை பெற முடியாது என்பதை
உணர்ந்து செயற்பட வேண்டும்.

போராட்டம் என்பது ஆயுத ரீதியானது அல்ல. தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதன்
மூலம் சர்வதேசத்துக்கு செய்தியை வெளிப்படுத்துவதாகும்.

பொது வேட்பாளர் வெல்லப் போவதில்லை.

அப்படியான போராட்டம் ஒன்றின் ஊடாக வடக்கு,
கிழக்கில் உள்ள மக்கள் ஓர் செய்தியை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மக்கள் தீர்ப்புக்காக ஐ.நாவை விட்டால் எவ்வாறான நிலை உருவாகும் என்பதை உணரும்
வகையில் வருங்கால சந்ததியர் மனதில் வைத்து போராட வேண்டும்.

வன்முறை மூலமோ, உணவு தவிர்ப்பு மூலமோ அல்ல. வேறு வடிவில் அந்த போராட்டம் அமைய
வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஜனாதிபதி தேர்தலில்
நிறுத்த வேண்டும்.

கொழும்பு ஹோட்டல்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு ஹோட்டல்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தென்னிலங்கை தலைவர்கள்

இந்த சந்தர்ப்பம் எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம். மும்மொழியிலும் பேசக்
கூடிய ஒரு வேட்பாளரை நாம் முன்நிறுத்த வேண்டும்.

அவர் எமது பிரச்சினைகளை மூன்று மொழியிலும் எடுத்து கூறுவார். ஐ.நா தகுந்த
வாக்கெடுப்பிற்காக முன்வரும் போது என்ன விடயத்தை கூறலாம் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

first-vote-for-tamil-vigneswaran-said-mayday-

தமக்கு விரும்பிய தென்னிலங்கை கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாத நிலை
உருவாகும் என பலரும் தயங்குகின்றனர். எனவே, முதல் வாக்கினை பொது வேட்பாளருக்கும், 2ஆம், 3ஆம் வாக்குகளை தாம் விரும்பும்
தென்னிலங்கை வேட்பாளருக்கும் வழங்க முடியும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கலவரம் வெடிக்கும் என கருதுகின்றனர்.

அவ்வாறு கலவரம்
ஒன்று உருவாகினால் இந்த சூழலில் எவ்வாறான நிலை ஏற்படும் என தென்னிலங்கை தலைவர்கள்
நன்கு விளங்கியுள்ளனர்.

புதுப் புது உத்திகளை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற வேண்டும். எமது காணிகளை
அபகரித்து, பெளத்த விகாரைகளை அமைக்கின்றனர்.

ஒற்றை ஆட்சியின் கீழ் மாகாண முறைமை மூலம் 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு
சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம்.

பெரும்பான்மயா இருந்த தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம். 

அனுர தரப்பிடம் பொருளாதார செயற்திட்டம் கிடையாது! ஹர்ஷ டி சில்வா

அனுர தரப்பிடம் பொருளாதார செயற்திட்டம் கிடையாது! ஹர்ஷ டி சில்வா

தமிழ் பொது வேட்பாளர் 

இந்த நிலையில்
பொது வாக்கெடுப்புக்கு கேட்டால் பயங்கரவாதி என்கின்றனர்.

இந்த சூழலில், ஜனாதிபதி வேட்டாளராக ஒருவரை நிறுத்தி அவ்வாறான வாக்கெடுப்புக்கான
களமாக பார்க்க வேண்டும்.

first-vote-for-tamil-vigneswaran-said-mayday-

முதலமைச்சராக இருந்த போது விசுவமடு பகுதியில் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த
போது படையினர் பாதுகாப்புக்காக வந்திருந்தார்கள்.எமக்கு பாதுகாப்பு தர
வந்திருந்ததாக கூறினர்.

ஆனால், அதில் ஒரு இராணுவ அதிகாரி காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். போர்
முடிந்து விட்டது. படையினர் போகலாம் என நான் நிகழ்வில் பேசியிருந்தேன்.

நிகழ்வு முடித்து சென்ற போது, வரும்போது அவர்களால் வழங்கப்பட்ட மரியாதைகள்
கிடைக்கவில்லை.

அன்று அவர்கள் பிரியாவிடை தரவில்லை.

இன்று வரையும் அவர்கள் பிரியாது உள்ளார்கள். காணிகளை கையகப்படுத்துகின்றனர்.
உணவகங்கள், வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

பௌத்த சின்னங்களை அமைக்கின்றனர்.

இப்போதும் இனவாத ஆட்சியே நடக்கிறது. அதனை யார் மாற்ற வேண்டும்? அதற்காக போராட
வேண்டும்.

அதற்கு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, உலகறியச் செய்ய வேண்டும் இதுவே
தமிழ் வேட்பாளரை நிறுத்தும் பணியின் உத்தியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : இலங்கையை பாதிக்கும் அபாயம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : இலங்கையை பாதிக்கும் அபாயம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.