இங்கிலாந்தில் (England) பழைய வீடொன்றை வாங்கி அதன் சமையலறையை புதுப்பித்த தம்பதிக்கு தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்ததில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள தெற்கு போர்டான் பகுதியை சேர்ந்த பெக்கி- ராபர்ட் தம்பதிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
சமையல் அறையின் தரைப்பகுதியை
இவர்கள் சமையலறையை திருத்தம் செய்யும் வகையில் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்திக் கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது. அதில் மேல் பகுதி முழுவதும் மண் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றை விலக்கி பார்த்தபோது பானை முழுவதும் தங்க காசுகளும், வெள்ளி காசுகளும் இருந்தன.
நடுவானில் இயங்க மறுத்த இயந்திரம் :கடற்கரையில் திடீரென தரையிறங்கிய விமானம்
மொத்தம் 1,029 நாணயங்கள்
ராபர்ட் அவற்றை எண்ணினார். மொத்தம் 1,029 நாணயங்கள் இருந்தன. அவை 1642ஆம் ஆண்டுக்கும், 1644ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் மன்னர்களின் உருவம் பதித்த நாணயங்கள் ஆகும்.
புதையல் கிடைத்த மகிழ்ச்சியை அந்த தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.
பின்னர் அவை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது.
சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் கைதியின் சடலம் மீட்பு
மகனின் படிப்புக்கும், வீட்டை புதுப்பிக்கவும்
அதன் மூலம் தம்பதிகளுக்கு 60 ஆயிரம் பவுன்ட் பணமும் கிடைத்தது. அந்தப் பணத்தை தனது மகனின் படிப்புக்கும், வீட்டைப் புதுப்பிக்கவும் பயன்படுத்த உள்ளதாக தம்பதியினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |