தமிழர் தாயகப்பகுதிகளில் அண்மை நாட்களாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், போர் காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உடல் இதிலிருந்து மீட்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய உத்தியோகப்பூர்வ செவ்வியின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தமீழீழ தேசிய விடுதலை போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து, குறிப்பாக 1980 ஆம் ஆண்டிலிருந்து பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகவும் 1983 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்து, மோதல்கள் வெடித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் பலர் காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டதோடு, கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் கடலில் அல்லது வீதிகளில் வீசப்பட்டதாகவும் சிலரது உடலங்கள் எரிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கொல்லப்பட்ட சிலரது உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தற்போது கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளில் உள்ளவை அவர்களது உடலாக இருக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த முழுமையான விடயங்கள் பின்வரும் காணொளியில் காணலாம்