கனடாவின் டர்ஹாம்(Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இரு தமிழர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு தமிழர்கள் கைது
இந்த மோசடி தொடர்பில் Ajax நகரை சேர்ந்த லக்சாந்த் செல்வராஜா (வயது 27) மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் (வயது 25)ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் இருவருக்கும் எதிராக 40 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி: கனேடிய அரசின் அதிரடி முடிவு…!
சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்
எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவில் நாற்பது நிமிடங்களுக்கு ஒரு திருட்டு: வெளியான அதிர்ச்சி தகவல்
இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |