தனது அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தகவல்கள் வெளியானால்
தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கப்படும் என்று ஆளுந்தரப்பினரான மொட்டுக்
கட்சியினர் எண்ணுகின்றனர்.
குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: தேடப்பட்ட வாகனம் கண்டுபிடிப்பு
அரசியல் பயணம்
அதனால் அவர்கள் எனது அரசியல் பயணத்தை முடக்க
முயல்கின்றனர்.என் அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. நெருக்கடி நிலைமையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விரைவில் மீட்டெடுப்பேன்.
சு.க.வின் தலைமையில்
ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழில் சட்டவிரோதமாக இறைச்சி வெட்டும் மாபியா கும்பல்: முற்றுகையில் ஒருவர் கைது
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா பச்சைக்கொடி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |