இலங்கையின் உயரமான மனிதன் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவினை (Mullaitivu) சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரன், இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை தனக்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் உயரமான மனிதர் என்று என்னை நேரகாணல் எடுக்கின்றார்கள். ஆனால், கிராம சேவையாளர் அல்லது பிரதேச செயலகத்தினால் எனக்கான அங்கீகாரம் தரப்படவில்லை
முதன்முதலில் புனர்வாழ்வில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர் எனது மருத்துவ அட்டையில் 7அடி 2 அங்குலம் உயரம் என எழுதியதோடு இலங்கையில் உயரமான மனிதராக இவர்தான் இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை
மேலும், எனக்கான போசாக்கு வசதிகள் சகலதும் செய்துகொடுக்க வேண்டும் என்றும் குறித்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 6000 பேருக்குள் என்னை முதன்மைபடுத்தி படுக்கை மற்றும் உணவு வசதிகள் என அனைத்தும்
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது எனது வாழ்வாதாரத்திற்காக முச்சக்கரவண்டியில் புதுக்குடியிருப்பு
பிரதேச பாடசாலை மாணவர்களை
ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.
அத்துடன், அரசாங்கத்தினால் ஊனம் உற்ற பணம் என்று மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபா
கொடுக்கின்றார்கள். எனது மனைவி என்னை பிட்டு பிரிந்த நிலையில், நான் இரண்டு பிள்ளைகளையும் வைத்து
வளர்த்து வருகின்றேன்.
தரப்படாத அங்கீகாரம்
இப்போது எனது காலில் ஏற்பட்ட காயத்தினை சரிப்படுத்த வேண்டும் என்பதோடு எனது தொழிலை
பலப்படுத்தி எனது பிள்ளைகளை வளர்க்கவேண்டும்.
இலங்கையில் நான் உயரமான மனிதன் என ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் நான்கு
அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன.
ஆனால், யாரும் எனக்கான அங்கீகாரத்தினை
தந்ததில்லை. எனது சுய உழைப்பில் இயங்கிக்கொண்டு ஒரு பேசும் பொருளாகவே
இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.