தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் சித்தாந்தங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
‘இலங்கையின் சமாதான செயன்முறை: ஓர் ஆழமான பார்வை’ ‘The Sri Lanka Peace Process: An Inside View’ என்ற நூல்,போராசிரியர் ஜி.எல். பீரிஸினால் எழுதப்பட்டு வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் செய்யப்பட்ட உன்படிக்கை
தாய்லாந்து மற்றும் கம்போடியா, காசா பகுதி மற்றும் உக்ரைன் மோதல்கள் தொடர்பில் சமாதான முயற்சிகளை உலகம் உன்னிப்பாக கவனித்து வரும் நேரத்தில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எழுதிய இந்த நூல் வெளிவந்துள்ளது.
30 ஆண்டுகால கொடூரமான போர் முடிவுக்கு வரும் என்ற பரவலான சர்வதேச எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்தில் தொடங்கிய அமைதி செயன்முறையின் அறிவார்ந்த சந்தர்ப்பங்களை நூல் உள்வாங்கியுள்ளதாக வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் அமைதி பேச்சுவார்த்தையின் இலட்சியமும், முயற்சியின் சின்னங்களும், உலகளாவிய கவனத்தை ஈர்த்தன. மேலும் பல தசாப்தங்களாக நடைபெற்ற போர் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் உரையாடல் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையையும் இன மோதல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான படிப்பினைகளை வழங்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சமகால உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொண்டுள்ள நிலையில், ‘இலங்கையின் சமாதான செயன்முறை: ஓர் ஆழமான பார்வை’ என்பது அமைதிச் செயல்முறைகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் பலவீனம் மற்றும் வழியில் ஏற்படும் தவறான நடவடிக்கைகளின் அபாயங்கள் பற்றி சரியான நேரத்தில் நினைவூட்டலை வழங்குகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

