முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தல் தொடர்பான ரணிலின் நிலைப்பாடு! பகிரங்கப்படுத்தும் மொட்டு கட்சி

இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.   

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபராக பதவியேற்று 2 வருடங்கள் நிறைவு பெறும் நாளில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார். 

அதிபர் வேட்பாளர்கள்

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் தொடர்பான ரணிலின் நிலைப்பாடு! பகிரங்கப்படுத்தும் மொட்டு கட்சி | Presidential Election Official Announcement Ranil

இந்த இருவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இலங்கையின் அரசியலில் பேசுபொருளாகியிருந்த இரண்டு கட்சித் தலைவர்களினதும் பகிரங்க விவாதம் இதுவரை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலி கருத்துக்கள்

தமது கட்சி இவ்வாறான போலி மற்றும் கேளிக்கையான கருத்துக்களை தமது கட்சி முன்வைக்காதென காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் தொடர்பான ரணிலின் நிலைப்பாடு! பகிரங்கப்படுத்தும் மொட்டு கட்சி | Presidential Election Official Announcement Ranil

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிபர் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதன் பினனர், தமது கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிபர் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் இது தொடர்பில் தமது கட்சிக்கு அவர் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காமினி லொக்குகே கூறியுள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.