புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கிய நிலையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது.
இப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருந்த நிலையில் இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.
ரஷ்ய அதிபர்
இதற்கிடையே, உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அத்தோடு, ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டுமெனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த கோரிக்கைகள்
இந்த நிலையில், புடினின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாதென ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புடின் தெரிவித்துள்ள போர் நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டார்.
அவரது போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை ஆகும் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது அத்தோடு ஹிட்லர் (Adolf Hitler) செய்த அதே விஷயத்தை புடின் செய்கின்றார்.
பாதுகாப்புத்துறை மந்திரி
இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்க (America) பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) கருத்து தெரிவிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் அநியாயமான படையெடுப்பால் அவர்களது நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர புடின் விரும்பினால் உக்ரேனிய இறையாண்மையை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.
அமைதியைக் கொண்டுவர உக்ரைன் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட அவர் எந்த நிலையிலும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.