முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் (Ceylon Electricity Board) மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த நிலைமைக்கு காரணம் என ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மின்சார சபை

எவ்வாறாயினும், அப்போது முன்வைத்த மின்சாரக் கட்டணக் குறைப்பு போதாது என்பதால் மீண்டும் முன்மொழிவுகளை மீள்திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.

மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல் | Electricity Tariff Revision 2024 Sri Lanka

நவம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதிலும், மின்சார சபை அன்றைய தினம் முன்மொழிவை சமர்ப்பிக்கவில்லை, ஆனால் நவம்பர் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரியிருந்தது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விசேட கொடுப்பனவு

எவ்வாறாயினும், குறித்த திகதியில் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்தாலும், முன்மொழிவுகளை ஆராய்ந்து மின்சார கட்டணங்களை திருத்துவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு இடைப்பட்ட கால அவகாசம் தேவைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல் | Electricity Tariff Revision 2024 Sri Lanka

எனவே, மின் கட்டண திருத்தம் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.