1988ஆம் ஆண்டு சிறிலங்காவின் (Sri Lanka) அதிபர் தேர்தல் நடைபெற்றபோது, இந்தியப் (India)படையினர் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு முழுவதையும் ஆக்கிரமித்து நின்றுகொண்டிருந்தார்கள்.
தாம் பதவிக்கு வந்தால் இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவேன் என்று அறைகூவல்விடுத்ததுடன், இந்தியப் படையினருக்கு எதிராகப் போராடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்த ரணசிங்க பிரேமதாசவுக்குதான் (Ranasinghe Premadasa) விடுதலைப் புலிகளின் செல்வாக்கு அதிகம் இருந்த வன்னி, மட்டக்களப்பு போன்ற பிரதேசத்து மக்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தார்கள்.
அதேபோன்று 1994ஆம் ஆண்டில் மிகப் பெரிய பொருளாதார மற்றும் ஆயுத நெருக்கடியை தமிழர் தரப்பு சந்தித்துக்கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போதும், சமாதானம் பேசிவந்த சந்திரிகா குமாரதுங்கவை (Chandrika Kumaratunga) தமிழர் தரப்பு ஆதரித்து, அசுவாசப்பட்டுக்கொள்ளும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
இப்படி, சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழர் தரப்பு பயன்படுத்திக்கொண்ட சில சந்தர்ப்பங்கள் பற்றியும், தற்போதைய அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பது பற்றிப் பார்க்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/27i-ukFfZbQ