முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் ரணிலால் சிங்களவர் வசமாகும் தமிழர் காணிகள்: நாடாளுமன்றில் ஒலித்த குரல்

வடக்கில் பொதுமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாக நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒரு தோற்றப்பாடை வெளிப்படுத்தினாலும், அங்கு பெரும்பாலான சிங்கள மக்களுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் (S. Kajendran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமை

இதேவேளை, போர் சூழலில் எமது மக்கள் தமது காணிக்கான உரிமைகளை இழந்த நிலையில், தற்போது குத்தகைதாரர்களாக மாற்றப்படுவதினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ரணிலால் சிங்களவர் வசமாகும் தமிழர் காணிகள்: நாடாளுமன்றில் ஒலித்த குரல் | Land Certificates North Kajendran Mp Speach

மேலும், இதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை பெற்றுக்கொடுத்து மக்களுக்கு சொந்தமான காணிகளை வழங்கவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள்

மேலும், வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக காணி உரித்தற்றவர்களாக காணப்படும் மக்களுக்களுக்கு காணி உரிமைகளை பெற்று கொடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் ரணிலால் சிங்களவர் வசமாகும் தமிழர் காணிகள்: நாடாளுமன்றில் ஒலித்த குரல் | Land Certificates North Kajendran Mp Speach

அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி உரிமைகள் வழங்குதல் என்ற பெயரில் 1984 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவித்தலின் படி பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஆக்கிரமித்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு காணி உரிமைகள் வழங்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில், அதிபர் ரணில் காணி உரிமை வழங்குதல் என்ற பெயரில் நல்லது செய்வது போல் தென்பட்டாலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/embed/jjS1xYVw4IA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.